×

800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை: ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர் சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமிடம் மீனவர்கள் நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Tags : Rameswaram , Over 800 barges not engaged in fishing: Rameswaram fishermen begin indefinite strike
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!